விஷாலுடன் இணையும் பிரியா பவானி ஷங்கர்?

0
Priya Bhavani Shankar to be paired opposite Vishal

‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா, அதைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசன் – ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இந்தியன் 2’, எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை,  ஹரிஷ் கல்யாணுடன் பெயரிடப்படாத படம், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Karthik Thangavelu – Vishal – Priya

இந்நிலையில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தில், கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஜெயம்ரவி நடிப்பில் ‘அடங்கமறு’ படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எனவும், லாக்டவுன் முடிந்த பிறகு படப்பிடிப்பு துவங்குமென எனவும் தகவல் வெளியாகவுள்ளது. மேலும், அதே பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள படத்திலும் நாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கவ்வுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...