காதல் தோல்வியில் நடிகை பிரியா பவானி சங்கர்!

0
Priya Bhavani Shankar Clarifies her Break up rumor

சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களில் பிரியா பவானி சங்கர் ஒருவர்.

Priya Bhavani Shankar Clarifies her Break up rumor
Priya Bhavani Shankar

மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான பிரியா, இப்படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்தியன் 2, பொம்மை, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். பிரியா சின்னத்திரையில் அறிமுகமாகும் முன்பே ராஜ்வேல் என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சித்ரா பௌர்ணமி இரவு! போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு friend சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார்😀 ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. 

Priya Bhavani Shankar Clarifies her Break up rumor

மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது. ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு.நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதை தராமல் நல்லதை தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்புமின்றி நான். கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி. மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு❤️” என பதிவிட்டார்.

Priya Bhavani Shankar Clarifies her Break up rumor

இது இணைய பார்வையில் காதல் தோல்வியாக மாறியது, இதனால் பல ஊடகங்கள் பிரியாவிற்கு காதல் முறிவு ஏற்பட்டதாக கூறி செய்திகள் வெளியிட்டது. இந்தச் செய்திகள் அனைத்துமே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மறைமுகமாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ப்ரியா பவானி சங்கர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தொலைபேசியைப் பார்த்துச் சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “நம்மைப் பற்றிய வதந்திகளை நாமே படிக்கும்போது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு, காதல் தோல்வி என்று வெளியாகியுள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கத்தான் என்று பிரியா பவானி சங்கருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.

Priya Bhavani Shankar Clarifies her Break up rumor
Priya Bhavani Shankar Insta Post

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...