இந்தியா ஜனநாயகத்தின் தாய் – பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரை

0
Prime Minister Modi's Independence Day Speech
Prime Minister Modi's Independence Day Speech

இந்தியா ஜனநாயகத்தின் தாய் – பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரை: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் தொடுவதையொட்டி நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டமாக காட்சியளித்து வருகிறது. அந்த வகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றியுள்ளார். அவர் பேசியதாவது:

Prime Minister Modi's Independence Day Speech
Prime Minister Modi’s Independence Day Speech – பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரை
  • அனைத்து இந்தியர்களுக்கும், இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • புதிய தீர்மானத்துடன் புதிய திசையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள் இது.
  • நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர், வீர் சாவர்க்கர் ஆகியோருக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
  • சுதந்திரத்திற்காக போராடியவர்களை மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவின் சிற்பிகளான ஜவஹர்லால் நேரு, ராம் மனோகர் லோஹியா மற்றும் சர்தார் வல்லபாய் படேல் போன்றவர்களுக்கும் நாம் தலை வணங்குகிறோம்.
  • இந்தியா ஜனநாயகத்தின் தாய்; நமது பன்முகத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நமது பொதுவான தேசபக்தியின் மூலம் நாம் பலம் வாய்ந்தவர்கள், என்பதை நமது தேசம் நிரூபித்துள்ளது.
  • நம்பிக்கைகள், லட்சியங்கள், உயர்வு மற்றும் தாழ்வுகளுக்கு மத்தியில் அனைவரின் முயற்சியால் இந்த 75 ஆண்டு கால பயணத்தில் நம்மால் முடிந்த இடத்தை அடைந்துள்ளோம்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் நபர், செங்கோட்டையில் இருந்து இந்த நாட்டின் குடிமக்களைப் புகழ்ந்து பாடுவதற்கான வாய்ப்பை 2014-ல், குடிமக்கள் எனக்கு அளித்தனர்.
  • அடுத்த 25 ஆண்டுகள் நாம் ஒன்றிணைந்து 5 தீர்மானங்களில் கவனம் செலுத்த வேண்டும்: – இந்திய வளர்ச்சி, அடிமைத்தன உணர்வுகளை ஒழித்தல், நமது பாரம்பரிய பெருமைகளை நிலைநாட்டுதல், நாட்டின் ஒற்றுமை, பிரதமர் & முதல்வர்கள் உட்பட ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையை உணர்ந்து செயல்படுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
  • உலகம் சுற்றுசூழல் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. புவி வெப்பமடைதல் பிரச்சினையை தீர்க்க, நம் முன்னோர்கள் நமக்கு அளித்த பாரம்பரிய வழிகள் உள்ளன.
  • செங்கோட்டையில் இருந்து எனது வலியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்குள் இருக்கும் இந்த வலியை வேறு எங்கு பகிர்ந்து கொள்வது? நமக்குள் சிதைவுகளை உருவாக்கியுள்ளோம்; நம் பேச்சில், நடத்தையில், வார்த்தைகளில் பெண்களை இழிவு படுத்துகிறோம். பெண்களை அவமரியாதை செய்வதை நிறுத்த உறுதிமொழி எடுக்க, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு.

இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE