‘ஜெயிலர்’ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் இவ்வளவா?
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, விநாயகம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மோகன்லால், சிவாராஜ் குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ப்ரீ புக்கிங்கில் மட்டும் இதுவரை உலகமுழுவதும் ரூ.12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பை நெல்சனின் திரைக்கதை பூர்த்தி செய்யுமா பொறுத்திருந்து பார்ப்போம்…
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண