உலகமுழுவதும் கொரோனா தாண்டவத்தால் ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர், அந்த வகையில் இந்தியா கடந்த மார்ச் இறுதி முதல் தற்போது வரை ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது.
இந்த ஊரடங்கில் மின்சார வாரியம் செய்து வரும் பகல் கொள்ளையை பற்றி நடிகர் பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார். ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், வீடு வீடாகச் சென்று மின் பயன்பாட்டை அளவீடு செய்யவில்லை. மாறாக அதற்கு முந்தைய கட்டணத்தையே கட்டச் அறிவுறுத்தியது, அதற்கான காலாவகாசத்தையும் நீட்டித்து உத்தரவிட்டது. ஆனால், தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு மின்கட்டணம் கண்மூடித்தனாமாக அதிகரித்து காட்டப்படுகிறது, காரணம் கேட்டால் மின் யுனிட்டின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.


இதன் பிரதிபலிப்பாக நடிகர் பிரசன்னா, “இந்த கொவிட் லாக்டவுன் காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டணக் கொள்ளை அடிப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் குமுறலாக அமைத்துள்ள இவரது கேள்வி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...