‘கங்குவா’ படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு வில்லன்:
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா, நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு வில்லன் நடிகரான ஜெகபதி பாபு இணைந்துள்ளார். சூர்யா மற்றும் ஜெகபதி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண