‘தளபதி 67’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்?: வாரிசு படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கம் படத்தில் நடிக்கவுள்ளார். ‘தளபதி 67’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தை செவன்த் ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கவுள்ளார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், சஞ்சய் தத் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கிட்டதட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக வலம்வரும் இளம்நடிகர் மாத்திவ் தாமஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் கும்பளங்கி நைட்ஸ், ஒன், ஜோ அண்ட் ஜோ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE