சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்! பிரபல நடிகரின் மனைவி மரணம்:
பிரபல கன்னட நடிகரான விஜய ராகவேந்திரா, கடந்த 2007ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு செளர்யா என்கிற ஆண் குழந்தையும் உள்ளது.விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த அபூர்வா என்கிற திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.


படபிடிப்பிற்க்கு நடுவே குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க தன் மனைவி மற்றும் மகன் உடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.சுற்றுலா சென்ற இடத்தில் தான் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கிறது. விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவரை பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கின்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுற்றுலா போன இடத்தில் பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் கன்னட திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண