தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணையும் பிரபல கன்னட நடிகர்: நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ‘கேப்டன் மில்லர்’ என பெயரிட்டுள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பீரியட் படமாக உருவாகிவரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது, மேலும் விரைவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கேரளா எல்லையில் துவங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய பாத்திரத்தில்(வில்லன்) நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.இவர் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்துவரும் ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE