சூர்யாவுக்கு வில்லனாகும் தமன்னாவின் காதலர்! எந்த படத்தில் தெரியுமா?:
‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இது இவர் இசையமைக்கும் 100வது படமாகும்.
பையோபிக் படமாக உருவாகும் இப்படத்தில் துல்கர் சல்மான் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இப்படத்தின் வில்லனாக நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. (இவர் நடிகை தமன்னாவின் காதலர் என்பது கூடுதல் தகவல்)
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண