ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தில் இணையும் பிரபல நடிகை:
ஜெயிலர், லால் சலாம் படங்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இப்படத்தின் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் நானி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதைத் தொடர்ந்து தற்போது பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷுடன் அசுரன், அஜித்துடன் துணிவு ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண