தோனி வரலாற்று படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

0
Popular actor Sushant Singh Rajput commits Suicide

முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத்.

Popular actor Sushant Singh Rajput commits Suicide
MS Dhoni – Sushant Singh Rajput

அப்படியே தோனியின் பிரதிபலிப்பாக அசத்தியிருந்த M.S.தோனி படம் மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது. அதன்பின் பல ஹிந்தி படங்களில் நடித்திருந்த சுஷாந்த் தனது மும்பை வீட்டில் பந்த்ரா இல்லத்தில் தூக்கில் தொங்கி மரணம் அடைந்துள்ளார். ஒட்டுமொத்த ஹிந்தி திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது, இவருக்கு வயது 34. இவரது தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழ்நிலையில் ஏன் தற்கொலை போன்ற விவரங்கள் இன்னும் சரியாக தெரியவில்லை. ஏற்கனவே சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக சிகிச்சைகள் எடுத்துவந்ததாக கூறப்படுகிறது. 

Popular actor Sushant Singh Rajput commits Suicide

இவரது “Dil Bechara” என்ற படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 வேஷ்டி சட்டையில் மாஸ் காட்டும் நடிகை ஷெரின்! வைரல் படங்கள்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...