வசூலில் சுணக்கம் காட்டும் ‘பொன்னியின் செல்வன் 2’! முழு விவரம்: மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.


இருப்பினும் முதல் 4 நாட்கள் உலகமுழுவதும் வசூல் வேட்டை நடத்திய இப்படம் ஐந்தாவது நாளில் படு மோசமான வசூலை பெற்று வருகிறது. மேலும், வெளிநாடுகளில் வசூல் எதிர்ப்பாராத வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறை மற்றும் போட்டிக்கு வேறு எந்த படங்களும் பெரிதாக இல்லாததால் இனிவரும் நாட்களில் அதிகரிக்கலாம் என டிரேடிங் வட்டாரங்கள் மத்தியில் கூறப்படுகிறது. 4 நாட்களில் இதுவரை உலகமுழுவதும் ரூ. 215 கோடிக்கும் மேல் வசூல் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…