பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்

0

படக்குழு:

நடிகர்கள்: ஜோதிகா, பார்த்திபன், பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் மற்றும் பலர்.

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: ராம்ஜி

எடிட்டிங்: ரூபன்

தயாரிப்பு: சூர்யா, 2D என்டர்டெய்ன்மென்ட்

இயக்கம்: JJ பெட்ரிக்.

Ponmagal Vandhal Movie Review
Ponmagal Vandhal Movie Stills

கதைக்களம்:

கதைக்களமான ஊட்டியில் தொடர் வரிசையாக 5 குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லபடுகின்றனர். மேலும் இரண்டு இளைங்கர்களும் இதனுடன் சேர்த்து கொள்ளப்பட, ஊட்டியே பதற்றமாகிறது. ஒரு கட்டத்தில் ஜோதி என்கிற பெண் தான் இதற்கெல்லாம் காரணம் என போலிஸ் கண்டுபிடித்து அவரை கொன்றும் விடுகிறது. காலங்கள் நகர, இறந்த ஜோதி குற்றமற்றவள் என கூறி மீண்டும் இந்த வழக்கை தூசித்தட்டுகிறார் பாக்யராஜ்(பெட்டிசன் பெத்துராஜ்), அந்த வழக்கை கையிலெடுத்து வாதாட புறப்படுகிறார் அவரது மகள் ஜோதிகா(வெண்பா). இறுதியாக ஏன் இவர்கள் இந்த வழக்கை மீண்டும் எடுக்கின்றனர்? அப்படி எடுத்த வழக்கில் ஜோதிகா ஜெயித்தாரா? என்பதே பரபரப்பான மீதிக் கதை.

Ponmagal Vandhal Movie Review
Ponmagal Vandhal Movie Stills

FC விமர்சனம்:

பொன்மகள் வந்தாள், பலதரப்பட்ட எதிர்ப்புகளையும் கடந்து இன்று(29.03.2020) அமேசான் OTT தளத்தில் வெளியாகியுள்ளது இப்படம். தனது இரண்டாவது இன்னிங்க்சில் தனக்கு ஏற்ற அதே சமயம் சமுதாயத்திற்கு குற்றங்களையும், தீர்வுகளையும் எடுத்துரைக்கும் கதைகளை பெரும்பாலும் தேர்வு செய்கிறார் ஜோதிகா, அதற்கு பக்கபலமாக அவரது கணவர் சூர்யா. அந்த வகையில் இப்படமும் சமுதாயத்திற்கு தேவையான கருத்தை உள்ளடக்கியே உருவாகியுள்ளது. வழக்கறிஞர் வெண்பாவாக வழக்கம்போல சிக்சர் அடித்துள்ளார் ஜோதிகா, வழக்கறிங்கராக வாழ்ந்துள்ளார் என்பதே உண்மை.

அதே இப்படத்தின் முதல் பெரிய வெற்றியே கதாப்பாத்திர தேர்வு தான், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் என கைத்தேர்ந்த நடிகர்களை படத்திற்குள் கொண்டு வந்தது கூடுதல் பலம். தன் கண்முன்னே நடக்கும் தவறுகளை தட்டிகேட்க துடிக்கும் ஜோதிகாவின் அப்பாவான பாக்யராஜ், ஜோதி வழக்கில் ஜோதிகாவை எதிர்த்து வாதாடும் மற்றொரு வழக்கறிஞர் பார்த்திபன், நீதிபதியாக பிரதாப் போத்தன், அரசியல்வாதியாக தியாகராஜன் என இவர்களது நடிப்பும்,முழு நிறைவு. 

Ponmagal Vandhal Movie Review
Ponmagal Vandhal Movie Stills

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் மென்மை, பின்னணி இசை கதையோட்டத்தை மேலும் சுவாரஸ்யம் ஆக்குகிறது. கத்தரி வெயில் நம்மை வாட்டிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்த படம் பார்க்கும்போது கண்களுக்கு குளிர்ச்சியை கடத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. ரூபனின் கட்ஸ் அருமை. அறிமுக இயக்குனரான ஜேஜே பெட்ரிக் தனது முதல் படத்திலேயே அழுத்தமான கதையை எடுத்துக்கொண்டு எந்தவித சமரசமும் இல்லாமல் முடித்துள்ளார் என்றே தோன்றுகிறது. நேர்த்தியான வசனங்கள், காட்சிகள்(குறிப்பாக கிளைமாக்ஸ்) என தனக்கான முதல் அடியை அழுத்தமாக வைத்துள்ளார் இயக்குனர். பாராட்டுகள் இயக்குனரே! இறுதியாக பொன்மகள் வந்தாள்! வெற்றி வாகை கூடினாள்!!

FC RATING: 3.75 /5

 

 

 செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…