ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் தாயரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’.


அறிமுக இயக்குனர் ஜேஜே பெட்ரிக் இயக்கியுள்ள இப்படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் என பலரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். கொரோனா தாண்டவத்தால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், துணிந்து வந்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார் சூர்யா, அமேசான் பிரைமில் இப்படத்தை நேரடியாக வெளியிட முடிவு செய்தார். இதற்கு தியேட்டர் அதிபர்கள் பக்கம் பலத்த எதிர்ப்பு இருப்பினும் துணிந்து இம்முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைமில் வரும் மே 29 -ஆம் தேதி நேரடியாக வெளியாகுமென ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் படக்குழு. மேலும் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்திற்கு இந்த முடிவு தடையாக இருக்குமென திரைத்துறை வட்டாரத்தில் முணுமுணுப்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...