மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி!

0
Pisasu 2 Movie Teaser Release Date is Here
Pisasu 2 Movie Teaser Release Date is Here

மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி: மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் பிசாசு 2.

ராக்ஃபோர்ட் என்டர்டைன்மென்ட் தயாரித்து வரும் இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி கௌரவ பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பூர்ணா, சைகோ  படத்தில்  நடித்த ராஜ்குமார் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.

👉 சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்! பூஜையுடன் துவக்கம் 

கார்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, பிசாசு 2 படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு தனி எதிர்ப்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

👉 திரிஷா நடிக்கும் ‘The Road! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Pisasu 2 Movie Teaser Release Date is Here
Pisasu 2 Movie Teaser Release Date is Here

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்