கடந்த 2014 -ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் பிசாசு.


ஹாரர் களத்தை நேர்த்தியாக பயன்படுத்தி அருமையான படைப்பாக கொடுத்திருப்பார் மிஷ்கின், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்ட படமாக இப்படம் அமைந்தது. இந்நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. மிஷ்கின் இயக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா, ‘சைகோ’ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் ராஜா இப்படத்தின் இசையமைப்பாராக கம்பேக் கொடுக்கவ்வுள்ளார். ராக்ஃபோர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் முருகானந்தம் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதுக்குறித்து மிஷ்கின் கூறுகையில், “இப்படம் முழுக்க முழுக்க பேய் கதையாக உருவாகவுள்ளது. முதல் பாகத்தைவிட இப்படத்தில் திகில் காட்சிகள் அதிகாமாவுள்ளது. ஒரு மலை கிராமத்தில் கதை சம்பவங்கள் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. முழு படப்பிடிப்பும் நீலகிரி மாவட்டம் மசனக்குடியில் நடைபெறும்” என கூறியுள்ளார்.






தற்போதைய செய்திகள்:- ⮕ ஐபிஎல் தொடரில் கேப்டன் தோனியின் முதல் விக்கெட்! ⮕ தோனி சந்தித்த முதல் பந்தில் அவுட் கொடுத்த அம்பயர்! தோனி ரிவ்யூ சிஸ்டம் ⮕ ‘ரகிட ரகிட ஊ’ ஹர்பஜன்சிங்கின் ட்ரேட்மார்க் பாராட்டு |
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...