‘பிச்சைக்காரன் 2’ திரைப்பட விமர்சனம் | Pichaikkaran 2 Movie Review
படக்குழு:
நடிகர்கள்: விஜய் ஆண்டனி, காவ்யா தபார், ராதாரவி, YG மகேந்திரன் மற்றும் பலர்.
இசை: விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு: ஓம் நாராயண்
எடிட்டிங்: விஜய் ஆண்டனி
தயாரிப்பு: விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்போரஷன்
இயக்கம்: விஜய் ஆண்டனி.


கதைச்சுருக்கம்:
மிகப்பெரிய கோடீஸ்வரரான கதையின் நாயகன் விஜய் ஆண்டனி, இவரை கொலை செய்து விட்டு மொத்த சொத்தையும் ஆட்டைய போடா நினைக்கும் ஒரு கும்பல். இதற்கு டெக்னாலஜி உதவியுடன் களமிறங்கும் அந்த கும்பல் ஹீரோவை கொலை செய்ததா? ஹீரோவிற்கு என்ன ஆனது? என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம்.
FC விமர்சனம்:
‘பிச்சைக்காரன்’ முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி முதன்முறையாக இயக்கி நடித்து வெளியாகியுள்ள பிச்சைக்காரன் 2 படம் எப்படி இருக்கு? என்பதை விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை விஜய் ஆண்டனி பெரிதாக வித்தியாசமில்லை வழக்கமான ஒரே மாதிரியான நடிப்புதான், ஆனாலும் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். இவரைத் தவிர மற்ற அனைவருமே கதாநாயகி உள்பட கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். நெருடல் இல்லை.
டெக்னிக்கல் தீமை பொறுத்தவரை ஓம் நாராயணின் ஒளிப்பதிவில் காட்சிகள் குவாலிட்டியாக இருக்கிறது. இசையிலும், எடிட்டிங்கிலும் கைதட்டல் பெறுகிறார் விஜய் ஆண்டனி. ஆனால் இயக்குனராக கொஞ்சம் சறுக்கி விட்டார் என தோன்றுகிறது. ஒரு நல்ல கருத்தை முன்னிறுத்தி திரைக்கதை அமைத்திருந்தாலும், பெரிதாக சுவாரஸ்யம் இல்லை. கதையை பொறுத்தவரை MGR காலத்து கதைதான் என்றாலும் டெக்னாலஜியை இடையில் நுழைத்து புதிதாக முயற்சி செய்துள்ளார் விஜய் ஆண்டனி, ஆனால் என்ன செய்வது! படம் ஒட்டவில்லை. சொல்லபோனால், இடையில் ஆங்காங்கே வரும் காட்சிகள் சேர்த்து மொத்தம் அரை மணி நேரம் தான் படம் நமக்குள் ஒட்டுகிறது. மற்றபடி, பெரிதாக ரசிக்கும் படி இல்லை. இதேபோல், VFX காட்சிகள் படு மோசமாகவே இருந்தது, கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இறுதியாக படம் எப்படி என்றால், பிச்சைக்காரன் முதல் பாகத்தை நினைத்து கொண்டு சென்றால் உங்களுக்கு பெரிய ஏமாற்றம் தான், எதுவும் நினைக்காமல் சென்றாலும் படம் ஏமாற்றம் தான். ரொம்பவும் ஆவரேஜ் ரகம் தான்…
Pichaikkaran 2 Movie Film Crazy Rating: 2 /5
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…