2016 -ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2. இசையமைப்பாளராக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனியின் திரை வாழ்கையில் பெரிய மைல்கல்லாக அமைந்தது இந்த பிச்சைக்காரன் திரைப்படம்.


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலுமே வசூலிலும் சக்கைப்போடு போட்டது. வித்தியாசமான கதையமைப்பில் அம்மா செண்டிமெண்ட், பிச்சைக்காரர்களின் வாழ்க்கை என பயணம் செய்யும் இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. பிச்சைக்காரன் 2, இப்படத்தை ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது வென்ற இயக்குனர் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கவுள்ளார். விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் சிறப்பாக வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்காக தனது உடல் எடையை 15 கிலோ குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே அதிக செலவில் தயாராகும் படமாகவும் இப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ
கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!
டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...