கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெண் குயின்’ திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.


தியேட்டர்கள் மூடியிருக்கும் இந்நேரத்தை சரியாக பயன்படுத்தி காய் நகர்த்தி வருகின்றன OTT தளங்கள். அந்த வகையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உட்பட சில படங்களை நேரடி ரிலீசாக கைப்பற்றியுள்ளன. அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண் குயின்’ திரைப்படத்தையும் அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது. கார்த்தி சுப்பராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பெண் குயின்’. கர்பிணியாக கீர்த்தி சுரேஷ் நிற்கும் படத்துடன் இப்படத்தின் முதல் பார்வையும் வெளியாகி எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது.


இந்நிலையில் வரும் ஜூன் 19 -ஆம் தேதி நேரடி வெளியிடாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...