கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் சேர்க்கப்பட்டுள்ளது.
பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த பேடிஎம் செயலி, விளையாட்டு சூதாட்டம் தொடர்பான விதிமீறல் காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து Paytm தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பேடிஎம் நிறுவனம் , செயலி நீக்கம் தற்காலிகமானது எனவும் பயனாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. வழக்கம் போல் பயனாளர்கள் செயலியை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விதிமீறல் காரணமாக பேடிஎம் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தற்காலிகமாகவே நீக்கப்பட்டு இருக்கிறது, விரைவில் மீண்டும் பிளே ஸ்டோரில் Paytm பயன்பாட்டு வரும் Paytm நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. அதேபோல், சிறிது நேரத்திலேயே மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேடிஎம் பயனாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…