பட்டாம் பூச்சி திரைப்பட விமர்சனம் | Pattampoochi Movie Review & Rating

0
Pattampoochi Movie Review & Rating
Pattampoochi Movie Review & Rating

பட்டாம் பூச்சி திரைப்பட விமர்சனம் | Pattampoochi Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி மற்றும் பலர்.

இசை: நவ்நீத்

ஒளிப்பதிவு: எசக்கி கிருஷ்ணசாமி

எடிட்டிங்: பென்னி ஆலிவர்

தயாரிப்பு: அவ்னி டெலிமீடியா

இயக்கம்: பத்ரி நாராயணன்.

Pattampoochi Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

கதைப்படி இப்படத்தின் கதைக்களம் 1989ஆம் நடப்பது போல சித்தரிக்கப் பட்டுள்ளது. தூக்குத் தண்டனை கைதியாக இரண்டரை வருடம் ஜெயிலில் இருக்கும் வில்லன் ஜெய், கூடிய விரைவில் தூக்கு கயிறு இவருக்கு காத்திருக்கிறது. இதுஒருபுறமிருக்க பட்டாம்பூச்சி என்கிற சைக்கோ கொலைக்காரன் ஊருக்குள் அடுத்தடுத்து கொலைகளை செய்து வருகிறான். போலீஸ் எவ்வளவு முயற்சி செய்தும் சைக்கோ யார் என்பது புலன்பட வில்லை. இந்நிலையில் ஜெய் தூக்கிலிடப்படும் நேரத்தில் அந்த மர்ம கொலைகளை செய்ததும் நான் தான் என வாக்குமூலம் கொடுக்க, திகைத்து போகிறது போலீஸ். இறுதியாக உண்மையில் ஜெய் சைக்கோவா? நாயகன் சுந்தர் சி இந்த மர்மத்தை கண்டறிந்தாரா? என்பதே கதைச் சுருக்கம்.

Pattampoochi Movie Review & Rating
Pattampoochi Movie Review & Rating

FC விமர்சனம்:

கதாநாயகனாக நடித்து வந்த ஜெய் இப்படத்தின் மூலம் கொடூர வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார். சரி, படம் எப்படி என விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை சுந்தர் சி, ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி என முக்கிய பாத்திரங்கள் அனைவருமே நிறைவாகவே, கொடுத்த பாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளனர். ஜெய் நடிப்பை பொறுத்தவரை முடிந்தவரை சைக்கோத் தனத்தை கொடுத்திருந்தாலும், இன்னும் நம்மை திகைக்க வைக்கும் அளவிற்கு இல்லை என்பதே நிதர்சனம். முயற்சிக்கு பாராட்டுக்கள்…

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை முதலில் எடிட்டர் பென்னி ஆலிவரை தான் சொல்ல வேண்டும், படத்தின் விறுவிறுப்பிற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளார். அதேபோல் எசக்கி கிருஷ்ணசாமி பல இடங்களில் நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருந்தாலும், இன்னுமே ஸ்கோப் இருந்தது ஒளிப்பதிவிற்கு ஆனால் முழுமையாக இல்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான். கிரைம் திரில்லர் கதைகளுக்கு பின்னணி இசை தான் முக்கியம் ஆனால் இப்படத்தில் பெரிதாக எடுப்பட வில்லை. தமிழ் சினிமா மட்டுமே பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு புதிய முயற்சியாக தெரிந்தாலும், உலக சினிமா ரசிகர்கள் இந்நேரம் கண்டுப்பிடித்திருப்பார்கள். எந்தெந்த படத்திலிருந்து காட்சிகள் எடுக்கப்பட்டது என, அந்தளவிற்கு பல படங்களை கையாண்டுள்ளனர்.

Pattampoochi Movie Review & Rating
Pattampoochi Movie Review & Rating

படத்தின் குறையாக தெரிவது படம் முதல் பாதியிலிருந்த அளவிற்கு இரண்டாம் பாதி விறுவிறுப்பு இல்லை. படத்தின் முதல் பாதியில் பல திருப்பங்கள், பரபரப்பு நம்மை எதோ பெரிதாக சொல்ல வருகிறார்கள் என்று பார்த்தால், இரண்டாம் பாதி சாதாரண ஹீரோ -வில்லன் போட்டியாக முடிந்து விடுகிறது. பெரிய ஏமாற்றம். பல காட்சிகளில் நம்பகத்தன்மை என்பதே துளியும் இல்லை, உதாரணமாக தூக்குத் தண்டனை கைதி ஒருவரை ரிஸ்க் எடுத்து வெளியே அழைத்து வரும் காட்சி அபத்தத்தின் உச்சம். அதேபோல், கதாநாயகி ஒருவரை சுத்தியலால் பின் தலையில் சுமார் 7, 8 அடிகள் அடிக்க, அந்த நபரோ தலையில் ஏதோ தூசியை தட்டுவது போல் தட்டி விட்டு மீண்டும் சண்டை செய்கிறார். ம்ம் என்னத்த சொல்ல… இறுதியாக படம் எப்படி என்றால், உண்மையில் முதல் பாதி சுவாரஸ்யம், இரண்டாம் பாதி சம்பவம்(ரசிகர்களுக்கு). மற்றபடி சுமார் ரகம்தான்…

Pattampoochi Movie Film Crazy Media Rating: 2 /5

 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்