‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறதா? வெளியான தகவல்: வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் அடுத்து நடித்து வரும் திரைப்படம் பத்து தல.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், அனு சித்தாரா, கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 14ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE