பட்டைய கிளப்ப வரும் ‘பத்து தல’ பாடல்! டான்ஸ் மாஸ்டர் இவரா?: நடிகர் சிலம்பரசன் தற்போது, கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், அனு சித்தாரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெரும் குத்து பாடல் ஒன்றை சமீபத்தில் படமாக்கியுள்ளனர், மேலும், பிரபல டான்ஸ் மாஸ்டர் சான்டி இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். ரஹ்மான் இசையில் சிம்பு நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் ‘மல்லிப்பூ’ பாடல் மெகா ஹிட்டடித்தது போல இந்த பாடலும் வெற்றி பெரும் என சிம்பு ரசிகர்கள் எதிர்ப்பார்க்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE