படமாகிறது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு!

0

தமிழ் சினிமாவில் தற்போதைய சூழலில் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கென டிரன்ட் உருவாகியுள்ளது. மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் பல பரிமாணங்களில் உருவாகி வருகிறது. 

Pasumpon Muthuramalinga Thevar Biopic Announced

இந்நிலையில் தற்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாகவுள்ளது. சுதந்திர போராட்டத்தில் தனது பங்களிப்புடன், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராகவும், தேசியவாதியாகவும், ஆன்மீகவாதியாகவும் தனது வாழ்க்கையை அர்பணித்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தென்மாவட்டத்தில் வருடா வருடம் இவருக்கு குருபூஜை நடத்தி வழிப்பட்டு வருகின்றனர். தற்போது ‘ஊமை விழிகள்’ படத்தை இயக்கிய அர்விந்தராஜ் இயக்கத்தில், ஏ.எம். சௌத்ரி தயாரிப்பில் ‘தேசிய தலைவர்’ என்கிற பெயரில் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு உருவாகவுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

Pasumpon Muthuramalinga Thevar Biopic Announced
Desiya Thalaivar First Look

 

 

பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...