‘பாட்னர்’ திரைப்பட விமர்சனம் | Partner Movie Review and Rating

0
Partner Movie Review and Rating
Partner Movie Review and Rating

‘பாட்னர்’ திரைப்பட விமர்சனம் | Partner Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: ஆதி, ஹன்சிகா மோத்வானி, யோகி பாபு, ரோபோ ஷங்கர் மற்றும் பலர்.

இசை: சந்தோஷ் தயாநிதி

ஒளிப்பதிவு: ஷபீர் அகமத்

எடிட்டிங்: பிரதீப் E ராகவ்

தயாரிப்பு: Royal Fortuna Creations

இயக்கம்: மனோஜ் தாமோதரன்.

Partner Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

பாட்னர், படத்தின் நாயகன் ஆதி தனது ஊரில் ஒருவரிடம் 25 லட்சம் கடன் வாங்கி கொடுக்க முடியாமல் தவிக்கிறார். கடன் கொடுத்தவன் ஒருக்கட்டதில் எல்லை மீறி பேச, கொந்தளித்த ஹீரோ இன்னும் ஒரே மாதத்தில் மொத்த கடனையும் அடைக்கிறேன்டா! என சவால் விட்டு சென்னை வருகிறார். சென்னையில் ஊரை ஏமாற்றும் அவரது நண்பர் யோகி பாபுவை சந்தித்து உதவி கேட்க, 25 லட்சமான்னு வாயை பிளக்கிறார் யோகி. இதையடுத்து பெரியளவு பணத்திற்காக இவர்கள் செய்யும் ஒரு காரியம், அவர்களை தலைகீழாக மாற்றுகிறது. அப்படி என்ன நடந்தது? இதில் நாயகி ஹன்சிகா எப்படி வந்தார்? இறுதியாக பிரச்சனைகளிலிருந்து தப்பித்து, ஹீரோ தனது கடனை அடித்தாரா? என்பதே படத்தின் முழுக்கதை.

FC விமர்சனம்:

ஆதி, ஹன்சிகா, யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் இன்று(ஆக.25) வெளியாகியிருக்கும் பாட்னர் படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை நாயகன் ஆதி கொடுத்த கதாப்பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார். நாயகி ஹன்சிகாவின் கதாப்பாத்திரத்திற்கு தான் திறமையை காட்ட அதிக வாய்ப்பு இருக்கிறது. (அது ஏன்? என்று படம் பார்த்தால் தான் தெரியும்). ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு நேர்த்தியாக செய்து கொடுத்துள்ளார். இவர்களை தவிர யோகி பாபு, ரோபோ ஷங்கர், பாண்டியராஜன், முனிஸ்காந்த் ஆகியோர் முடிந்தவரை சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர், ஆனால் நம்மால் பெரிதாக சிரிக்க முடியவில்லை.

Partner Movie Review and Rating
Partner Movie Review and Rating

சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரிதாக கவரவில்லை. மற்ற டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை எந்தவொரு குறையுமில்லை. ஆனால் கதை, திரைக்கதையை பொறுத்தவரை, இரண்டாம் பாதியில் சில இடங்கள் மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கிறது. முதல் பாதியில் காமெடி என்கிற பெயரில் நம்மை பெரிதும் சோதித்து பார்த்துள்ளனர். எந்த இடத்திலும் காமெடி பெரிதாக ஒர்க் அவுட்டாகவில்லை (இதில் டபுள் மீனிங், அடல்ட் காமடிகள் வேறு). ஒருவரிக் கதையாக பார்த்தால் வித்தியாசமான முயற்சி தான், ஆனால் முழுப்படமாக  மாற்றும்போது தான் ரசிகர்களான நமக்கு சோதனையாக மாறிவிட்டது. மொத்தமாக இப்படம் எப்படி? என்றால், ரொம்ப ரொம்பவே ஆவரேஜ் ரகம் தான் (பணம் நிறைய இருந்தால்(மட்டும்) முயற்சி செய்து பாருங்கள்)…

(அடல்ட் காட்சிகள் இருக்கிறதா? டபுள் மீனிங், அடல்ட் காமெடி வசனங்கள் நிறைய உள்ளது. குடும்பத்துடன் பார்க்கலாமா என யோசித்து முடிவெடுங்கள்…)

Partner Movie Film Crazy Media Rating: 2 /5

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண