‘பாரா’ பாடல் வரிகள்| Paaraa Song Lyrics in Tamil – Indian 2

7
Paaraa Song Lyrics in Tamil
Paaraa Song Lyrics in Tamil

‘பாரா’ பாடல் வரிகள்| Paaraa Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: பாரா…
வருவது ஓராட் படையா…
வீரா…
விழுப்புண் அலங்காரா…

ஆண்: மாறா…
ஆயிரம் உடைவாள் ஒருவன்…
பேரா…
வரிப்புலி வரலாறா…

ஆண்: தினவுள்ள தோள்கள் உண்டு…
தீயைக் கக்கும் வாட்கள் உண்டு…
புரவிக்கு றெக்கை உண்டு…
புயலுக்கும்தான் உருவம் உண்டு…

ஆண்: தொட்டுப்பார் கை நடுங்கும்…
மூச்சடங்கும் இவனைக் கண்டு…
வேட்டைக்கு போகுது பார்…
வேங்கை வெகுண்டு…

ஆண்: என் தாய் மண்மேல் ஆணை…

ஆண்: என் தாய் மண்மேல் ஆணை…
இது தமிழ் மானத்தின் சேனை…
அட வெள்ளை ரத்தம் தொட்டு…
இனி வாளில் ஏற்று சாணை…

ஆண்: என் தாய் மண்மேல் ஆணை…
இது தமிழ் மானத்தின் சேனை…
அட வெள்ளை ரத்தம் தொட்டு…
இனி வாளில் ஏற்று சாணை…

ஆண்: பாரா…
வருவது ஓராட் படையா…
வீரா…
விழுப்புண் அலங்காரா…

ஆண்: மாறா…
ஆயிரம் உடைவாள் ஒருவன்…
பேரா…
வரிப்புலி வரலாறா…

பெண்: கன்னங்கரு இரவு போதாதா நமக்கு…
வெள்ளைக்கார நிலா வான்மீது எதற்கு…
ரத்தக்கறை படிஞ்ச உன் வாளின் முனைக்கு…
முத்தக்கறை ஒன்னு வேணாமா துணைக்கு…

பெண்: உன்னோட காலடி குளம்பாகனும்…
உன்மேல விழும்புண் தழும்பாகனும்…
உன் கையில் சேரும் வரமாகனும்…
இல்ல தாய்மண்ணுக்கே நான் உரமாகனும்…

ஆண்: அடியே வெடியே…
அல்லிக் கொடியின் மடியே உன்ன…
அள்ளி வாசம் பாக்க வரட்டா…

ஆண்: புரியா வலியே செல புலியே புலியே…
உன்மேல் வரிகள் எண்ணி எண்ணி சொல்லட்டா…

ஆண்: துப்பாக்கி தப்பாய்க் கொண்ட…
சிப்பாய்கெல்லாம் சிம்மம் நீயே…
நட்பாகி நேசம் காட்டும்…
குப்பாய்க்கெல்லாம் மகனும் நீயே…

ஆண்: அடிமைகள் ரத்த்திற்கெல்லாம்…
வெப்பம் தந்த வீரத் தீயே…
அதிகார வர்கத்துக்கு அறைகூவல் நீயே…

ஆண்: என் தாய் மண்மேல் ஆணை…
இது தமிழ் மானத்தின் சேனை…
அட வெள்ளை ரத்தம் தொட்டு…
இனி வாளில் ஏற்று சாணை…

ஆண்: என் தாய் மண்மேல் ஆணை…
இது தமிழ் மானத்தின் சேனை…
அட வெள்ளை ரத்தம் தொட்டு…
இனி வாளில் ஏற்று சாணை…

ஆண்: பாரா…
வருவது ஓராட் படையா…
வீரா…
விழுப்புண் அலங்காரா…

ஆண்: மாறா…
ஆயிரம் உடைவாள் ஒருவன்…
பேரா…
வரிப்புலி வரலாறா…

 

பாடல் விவரம்:

திரைப்படம்: இந்தியன் 2

இசை: அனிருத்

பாடியவர்கள்: அனிருத்

பாடலாசியர்: பா. விஜய்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…