‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்பட்டவர் நடிகை ஓவியா, இப்படத்தை தொடர்ந்து மெரீனா, கலகலப்பு, மூடர் கூடம், புலிவால், யாமிருக்க பயமேன், 144, 90 ML, களவாணி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


இப்படங்கள் அனைத்தும் கொடுக்காத பிரபலத்தை பிக்பாஸ் என்கிற ஒரு நிகழ்ச்சி இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது. ரசிகர்கள் வட்டம் பெரிதாக சென்சேஷனல் நடிகையாக மாறினார். இவ்வளவு பெரிய பிரபலம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள தவறினார் ஓவியா. இதெல்லாம் ஒருபுறம் இருக்க நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் ஓவியா. அவற்றில் உங்களுக்கு காதலர் இருக்கிறாரா? என்கிற கேள்விக்கு “இல்லை நான் சிங்கிள் தான்’ என கூறியுள்ளார். மேலும், அடுத்தது படமா இல்லை திருமணமா? என்று ஒரு ரசிகர் கேட்க, “திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தற்போதைக்கு இல்லை” என கூறியுள்ளார்.


கூடுதலாக தான் அடுத்தடுத்து இரண்டு வெப்சீரிஸில் மட்டும் நடிக்கவுள்ளதாகவும், படவாய்ப்புகள் ஏதுமில்லை என்பது குறித்தும் கூறியுள்ளார்.
—————————மேலும் உங்கள் பார்வைக்கு—————————–
எங்களது யூடியூப் சேனலை பார்க்க, படித்திருந்தால் SUBSCRIBE செய்யவும்…
* புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்
* மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்!
* சிவப்பு உடையில் பளபளக்கும் அழகு! சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள்
* 50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்!
* அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் அழகிய படங்கள்
* த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்! ஏன் எப்படி என ரசிகர்கள் காட்டம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...