அரசு கோரிக்கை ஏற்கும் வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது!

0
Omni Bus Service didn't start today in Tamil Nadu

அரசு கோரிக்கை ஏற்கும் வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது:

Omni Bus Service didn't start today in Tamil Nadu
Omni Bus Service didn’t start today in Tamil Nadu

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து இன்று முதல் துவங்கியுள்ளது. ஆனால், தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்ட பிறகே பேருந்துகளை இயக்குவோம் என தனியாா் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா். கடந்த மார்ச் மாதம் 25 -ஆம் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. பஸ்களை இயக்காத காலத்துக்கும் சாலைவரி கட்டும்படி நிர்பந்தித்தால் எப்படி கொடுக்க முடியும். இது தொடர்பாக ஏற்கனவே ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வழக்கு மறு விசாரணை வருகிற 25-ந் தேதி வருகிறது. அன்றைய தினம் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 50 சதவிகிதம் பயணிகளோடு பேருந்துகளை இயக்கினால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்த பிறகுதான் பஸ்களை இயக்குவோம் என தனியாா் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

 

விஜயின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் – வெற்றிமாறன் சுவாரஸ்ய தகவல்

லாஸ்லியா நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம்! புதுப்பட தகவல்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...