‘ஓ மை டாக்’ திரைப்பட விமர்சனம் | Oh My Dog Movie Review & Rating

0
Oh My Dog Movie Review & Rating
Oh My Dog Movie Review & Rating

‘ஓ மை டாக்’ திரைப்பட விமர்சனம் | Oh My Dog Movie Review & Rating:

படக்குழு:

நடிகர்கள்: அருண் விஜய், விஜயக்குமார், அர்னவ் விஜய், மகிமா நம்பியார், வினய் மற்றும் பலர்.

இசை: நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு: கோபிநாத்

எடிட்டிங்: மேகநாதன்

தயாரிப்பு: 2D என்டர்டைன்மென்ட்

இயக்கம்: சரவ் சண்முகம்

OTT: அமேசான் பிரைம் பிரீமியர்.

Oh My Dog Movie Review & Rating
Oh My Dog Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

இன்டர்நேஷனல் லெவல் போட்டிகளில் நாய்களை வைத்து பந்தயமடிக்கும் வில்லன் வினய், அவரது நாய் ஒன்று ஈன்ற குட்டி கண் தெரியாமல் போனதால் இது எங்க போட்டியில் கலந்து கொள்ள போகிறது என தனது ஆட்களிடம் கொடுத்து கொல்ல சொல்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குட்டி நாயகனின்(அருண் விஜய்) மகன்(குட்டி நாயகன்) அர்னவிடம் செல்கிறது. பிறகென்ன அர்னவும், அந்த நாய் குட்டியும் செய்யும் அட்டாகாசங்கள், அதற்கு அருண் விஜயின் கோபம், வில்லன் எப்படி இவர்களுக்குள் வருகிறான்? என்கிற சுவாரஸ்யமே முழுக்கதை.

Oh My Dog Movie Review & Rating
Oh My Dog Movie Review & Rating

FC விமர்சனம்:

விஜயக்குமார், அருண் விஜய், அர்னவ் விஜய் என மூன்று தலைமுறை நடிகர்கள் நடிக்க அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ளது இந்த ஓ மை டாக், சரி வாங்க படம் எப்படி என்று பார்ப்போம். அருண் விஜய், விஜயக்குமார், மகிமா நம்பியார், வினய் என அனைவருமே கொடுத்த பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். அர்னவ் விஜய்க்கு முதல் படம் என்பதால் பல இடங்களில் ரசிக்க வைத்தாலும், ஒருசில இடங்களில் தடுமாற்றம் தெரிகிறது. அடுத்தடுத்த படங்களில் இது சரியாகிவிடும் என நம்பலாம். இவர்களுடன் அந்த நாயும் செம க்யூட்டாக படமுழுக்க ரசிக்க வைக்கிறது.

நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு ஏற்ப கலர்ஃபுல்லாக வந்துள்ளது. கதையை பொறுத்தவரை கண் தெரியாத நாய் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெரும் என்பது சுத்தமாக நம்பமுடியாதது போல் இருக்கும், ஆனால் உண்மையில் அப்படி ஒரு நாய் கண் தெரியாமல் போட்டிகளில் ஜெய்த்து சாதித்துள்ளது. அதை வைத்து தான் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். 

Oh My Dog Movie Review & Rating
Oh My Dog Movie Review & Rating

இப்படத்தின் குறையாக தெரிவது நிறைய செயற்கைத்தனமான காட்சிகள், உதாரணமாக நாயை திருட வரும் வில்லன் ஆட்கள் நாய் போலவே அமைப்புள்ள வண்டியில் வருவது, பெரிய இன்டர்நேஷனல் போட்டி அதில் கலந்து கொள்ள சிறுவர்கள் தனியாக செல்வது போன்ற அபத்தங்கள் இருக்கத்தான் செய்கிறது. வில்லனாக வரும் வினய் கதாப்பாத்திரம் ஏதோ மேஜிக் செய்பவன் போல் உடையுடன் BMW காரில் வலம்வருவது, அவரது அடியாட்கள் பாத்திரங்கள் எல்லாம் Home Alone, Babies Day Out போன்ற ஹாலிவுட் படங்களின் தொகுப்பாக தான் தெரிகிறது. நல்ல கதைக்களம் தான் இன்னும் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் நன்றாகவே வந்திருக்கும். இறுதியாக படம் எப்படி என்றால்? உங்கள் வீட்டில் குழந்தைகள், சிறுவர்கள் இருக்கிறார்களா? கண்டிப்பாக ரசிப்பார்கள் இது அவர்களுக்கான படம் மட்டும் தான். மற்றபடி ஓகே ரகம்தான்…

  Oh My Dog Movie FC Rating: 2.5 /5  

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்