ஒடிசா ரயில் விபத்து: இலவச கல்வியை வழங்குவதாக கவுதம் அதானி அறிவிப்பு:
ஒடிசாவில் ஏற்பட்ட கொடூர ரயில் விபத்தில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்த விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச பள்ளிக் கல்வியை வழங்குவதாக தொழிலதிபர் கவுதம் அதானி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மிக மோசமான, கவலையளிக்கும் ரயில் விபத்தாக ஒடிசா சம்பவம் அமைந்துள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வியை அதானி குழுமம் கவனித்துக் கொள்ளும். மேலும் இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதும், குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதும் நமது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும் என கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் வீரர் சேவாக்-கும் இதேபோன்று தனது பள்ளி மூலம் இலவச கல்வியை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…