‘ஓ2 (O2)’ திரைப்பட விமர்சனம் | O2 Movie Review and Rating

0
O2 Movie Review and Rating
O2 Movie Review and Rating

‘ஓ2 (O2)’ திரைப்பட விமர்சனம் | O2 Movie Review and Rating:

படக்குழு: 

நடிகர்கள்: நயன்தாரா, பேபி ரித்விக் மற்றும் பலர்.

இசை: விஷால் சந்திரசேகர்

ஒளிப்பதிவு: தமிழ் A அழகன்

எடிட்டிங்: செல்வா RK

தயாரிப்பு: ட்ரீம் வாரியர்ஸ்

இயக்கம்: G.K.விக்னேஷ்

OTT: டிஸ்னி + ஹாட்ஸ்டார்.

O2 Movie Review and Rating
O2 Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

தனது மகனுக்கு இருக்கும் மருத்துவ கோளாறுக்கு கொச்சின் சென்று தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற நெருக்கடியில் நாயகி நயன்தாரா. எனவே தனது மகனுடன் பேருந்து ஒன்றில் கொச்சின் செல்லும் நயன்தாரா, எதிர்பாராத விதமாக அந்த பேருந்து ஒரு இடத்தில் மாட்டிக்கொள்கிறது. இதன்பிறகு பேருந்தில் உள்ளவர்கள் என்ன ஆனார்கள்? மீண்டு வந்தார்களா? என்பதே கதைச்சுருக்கம்.

FC விமர்சனம்:

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இந்த ‘ஓ2 (O2)’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. படம் எப்படி என விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை நயன்தாரா மகனின் உடல்நலக்குறைவிற்கு வருத்தப்படும் இடத்திலும், பேருந்து விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நேரத்தில் தான் பிள்ளையை காப்பாற்ற போராடும் இடத்திலும் நிறைவே ஸ்கோர் செய்துள்ளார். இவரை தவிர யூடுயூபை கலக்கும் பேபி ரித்விக் துவங்கி இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்த பலரும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாகவே செய்துள்ளனர்.

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை, கதைப்படி ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ளும் பேருந்து என்கிற பட்சத்தில் அப்போது ஏற்படும் பதப்பதப்பை நம்மிடம் கடத்த ஒளிப்பதிவு, எடிட்டிங் & பின்னணி இசை (சவுண்ட் எஃபெக்ட்ஸ்) ரொம்ப முக்கியம். இவர்கள் அனைவருமே இதை ஓரளவு செய்து முடித்துள்ளனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை இப்படத்தின் கதைக்களம் முற்றிலும் புதுமை என்றே சொல்லலாம், ஆனால் உலகப்படங்கள் பார்க்கும் ரசிகர்களுக்கு புதிதாக இருக்க வாய்ப்பில்லை.  கொரியனில் கூட இதுப்போன்ற படங்கள் வந்துள்ளது. அவற்றையெல்லாம் வைத்து தான் இப்படம் உருவாக்கப்படிருந்தாலும், மேக்கிங்கில் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர்.

👉 வீட்ல விசேஷம் திரைப்பட விமர்சனம்

இது போன்ற கதையம்சத்துடன் டனள், சிங்க்ஹோல் ஆகிய படங்கள் நமக்கு கொடுத்த அந்த பரபரப்பும், விறுவிறுப்பும் இப்படம் கொடுக்கவில்லை என்பதே உண்மை. நயன்தாரா அவரது மகன் கதாப்பாத்திரத்தை தவிர மற்ற கதாப்பாத்திரங்கள் அனைத்துமே மேலோட்டமாக உருவாக்கப்பட்டது போல் உள்ளது. இது எல்லாவற்றையும் வுட இப்படத்தின் VFX படு மோசமாக அமைந்துள்ளது, பல இடங்களில் கார்ட்டூன் படம் பார்ப்பது போல் தோன்றுகிறது. இதுவே படத்தின் பெரிய குறையாக அமைந்துள்ளது. மேலும் டப்பிங் சரியான முறையில் இல்லாததால் நயந்தாராவிற்கே பல இடங்களில் அவர் ஒன்னு பேச, டப்பிங் வேறு வருகிறது. இறுதியாக படம் எப்படி என்றால், தமிழ் சினிமாவிற்கு புதிய கதையாக இருந்தாலும், மேக்கிங்கில் கோட்டை விட்டதால் சுமார் ரகமாக தான் இப்படம் வந்துள்ளது. OTT என்பதால் நயன்தாராவிற்காக ஒருமுறை பார்க்கலாம்…

‘O2’ Movie Film Crazy Media Rating: 2.5 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்