திருச்சி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்திற்குள்பட்ட இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவபுரம் முன்பாக இருந்த, தந்தை பெரியார் சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இச்செயலை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது, “சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
⮕ திருச்சியில் பெரியார் சிலை மீது காவி பூசி அவமதிப்பு!
சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கும். pic.twitter.com/fuFsqnvS4p
— O Panneerselvam (@OfficeOfOPS) September 27, 2020
⮕ இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா வொர்க்அவுட் படங்கள்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...