நீட் தேர்வு அச்சத்தாலும், மனஉலைச்சலினாலும் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதுக்குறித்து பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சமூக தன்னார்வலர்களும் பல்வேறு வகையில் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்கிவரும் நடிகர் சூர்யா, நீட் தேர்வு குறித்த தனது ஆதங்கத்தை அறிக்கையாக வெளியிட்டார்.


அந்த அறிக்கையில், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்ற வார்த்தையை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் நடிகர் சூர்யா பேசியதாக, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்க வேண்டும் என்றும், நீதிமன்ற மாண்பை காக்க வேண்டும் என்று நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் நடிகர் சூர்யா அறிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு விசாரணைக்கு பிறகு 25 பக்கம் கொண்ட உத்தரவை அளித்தது. நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...