தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் | நிவர் புயல்

0
Nivar Storm National Disaster Rescue

ங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 420 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக கடலோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுக்குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவின் இயக்குனர் ஜெனரல் கூறியதாவது, “தமிழகத்தில் 12 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.  இதேபோன்று, புதுச்சேரியில் 2 குழுக்கள், காரைக்காலில் 1 குழுவும் தயாராகவுள்ளன. மொத்தம் 22 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையிலும், 8 குழுக்கள் காத்திருப்பிலும் உள்ளதாக கூறியுள்ளார்.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...