இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது நிவர் புயல்! | Nivar Cyclone Updates

0
Nivar Cyclone Live Updates

ங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், தற்போது அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. மேலும்,இன்று நள்ளிரவிலிருந்து நாளை அதிகாலைக்குள் நிவர் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூரிலிருந்து 290 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், புதுச்சேரிக்கு 300 கி.மீ & சென்னைக்கு 350 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று வரை தீவிர புயலாக இருந்த இந்த நிவர், இன்று அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது, மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், அடுத்த 12 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...