புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! | நிவர் புயல்

0
Nivar Cyclone 144 order for Puducherry
நிவர் புயலை காரணமாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  நாளை மறுநாள் காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காரைக்கால் மாவட்டத்தில் நாளை காலை 10 மணி முதல் வியாழன் காலை வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 420 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...