‘நினைவிருக்கா’ பாடல் வரிகள் | Ninaivirukka Song Lyrics in Tamil – Pathu Thala

Ninaivirukka Song Lyrics in Tamil
Ninaivirukka Song Lyrics in Tamil

‘நினைவிருக்கா’ பாடல் வரிகள் | Ninaivirukka Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: நினைவிருக்கா அழகே நாம்
பறந்திருந்தோம் பறந்திருந்தோம்
அடியே நாம்
பறந்திருந்தோம் மறந்திருந்தோம்
அழகே நாம்…

ஆண்: மறப்போமா மறப்போமா
மறுப்போமா மறுப்போமா
நாட்களை நாம்…

ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் நிழலடிக்க
நீ வெடி வெடிக்க…

ஆண்: அந்த வானம் பூமி ஆனாலும்
நம் காதல் தூங்காதே…

ஆண்: இந்த பூமி பாலை ஆனாலும்
நம் பாடல் ஓயாதே…

ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் எதிர்களிக்க
நீ வெடிவெடிக்க…

ஆண்: மறப்போமா மறப்போமா
மறுப்போமா மறுப்போமா
நாட்களை நாம்…

ஆண்: குழலோடு கேட்காதே
காற்றில் பேசும் வார்த்தையை…

ஆண்: அலையோடு கேட்காதே
நீந்தி போகும் தூரத்தை
இவனோடு கேட்காதே
கண்ணில் வாழும் ஈரத்தை…

ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் எதிர்களிக்க
நீ வெடி வெடிக்க…

பெண்: அட கிருக்கா அட கிருக்கா
நீ சிறை பிடிக்க நான் சிறகடிக்க…

பெண்: நினைவிருக்கா
நினைவிருக்கா
நினைவிருக்கா…

பெண்: நான் தூங்க போன மீனில்லை
நீ தூண்டில் போடாதே
அந்த கால மாற்றம் மாறாதே
நீ காற்றில் ஏறாதே…

ஆண் & பெண்: ஓஹோ
இன்னொரு நெஞ்சம் எனக்கில்லை
உன்னிரு கண்களில் கனவில்லை
அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே…

ஆண் & பெண்: ஓஹோ
பின்னிய காலங்கள் கணக்கில்லை
தண்ணீரில் கோலங்கள் எனக்கில்லை
நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…

ஓஓ…

பெண்: நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே….

பாடல் விவரம்:

திரைப்படம்: பத்து தல

இசை: A. R. ரஹ்மான்

பாடியவர்கள்: ஏ.ஆர். அமீன் & சக்திஶ்ரீ கோபாலன்

பாடலாசியர்: கபிலன்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…