‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட விமர்சனம் | Nenjuku Needhi Movie Review & Rating

0
Nenjuku Needhi Movie Review & Rating
Nenjuku Needhi Movie Review & Rating

‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட விமர்சனம் | Nenjuku Needhi Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிசந்திரன், ஆரி, ஷிவானி ராஜசேகர், மயில்சாமி மற்றும் பலர்.

இசை: திபு நினன் தாமஸ்

ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்

எடிட்டிங்: ரூபன்

தயாரிப்பு: போனி கபூர்

இயக்கம்: அருண்ராஜா காமராஜ்.

Nenjuku Needhi Movie Review & Rating
Nenjuku Needhi Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

போலீஸ் ASPஆக வரும் படத்தின் கதாநாயகன், படத்தின் துவக்கத்திலேயே ஒரு ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகி வருகிறார். ஜாதியின் பிடியில் கோரத்தாண்டவம் ஆடும் அந்த ஊரில், தலித் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். மற்ற போலீஸ்காரர்கள் தொட யோசிக்கும் இந்த வழக்கை கையிலெடுக்கிறார் நாயகன். இறுதியாக இந்த பெண்களை கொன்றது யார்? கண்டுப்பிடித்தாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம்.

Nenjuku Needhi Movie Review & Rating
Nenjuku Needhi Movie Review & Rating

FC விமர்சனம்:

பாலிவுட்டில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற ஆர்டிகிள் 15′ படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியாகியுள்ளது இந்த ‘நெஞ்சுக்கு நீதி’, படம் எப்படி இருக்கு? என விமர்சனத்தில் பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை இப்படத்திற்கு உதயநிதி பொருந்துவரா? என ஆரம்பத்தில் பேசப்பட்ட நிலையில், கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்து வெற்றி பெற்றுள்ளார் உதயநிதி. ஏனென்றால் இந்த கதாப்பாத்திர வடிவைமைப்பே அப்படிதான், மெச்சுரிட்டியான நடிப்பு ரசிக்க வைத்துள்ளது. இவரை தவிர ஆரி, ஷிவானி ராஜசேகர், இளவரசு, மயில்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, தான்யா ரவிசந்திரன் என அனைவருமே படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர், கொடுத்த பாத்திரத்தை மிக அருமையாகவே செய்து கொடுத்துள்ளனர்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ராவாக செல்லும் இப்படத்தை ஒருபடி மேலே ரிச்சாக காட்டியுள்ளது. திபு நினன் தாமஸின் இசையில் பாடல்களும் சரி, பின்னனி இசையும் சரி மிக அருமையாக வந்துள்ளது. படத்தை கிரிப்பாக நகர்த்தி செல்ல அதிகளவு உதவியுள்ளது. கனா படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என பெயர் வாங்கிய அருண்ராஜா காமராஜ் இப்படத்தின் மூலம் மீண்டும் அதை நிரூபித்துள்ளார். என்னதான் ரீமேக் படமாக இருந்தாலும், சர்ச்சையை ஏற்படுத்தும் அளவிற்கான இந்த கதையை நீட்டாக கையாண்டுள்ளார்.

Nenjuku Needhi Movie Review & Rating
Nenjuku Needhi Movie Review & Rating

குறிப்பாக இப்படத்தின் வசனங்கள் உண்மையிலேயே மனதை உலுக்கும் படித்தான் அமைந்துள்ளது. உதாரணமாக, சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் வெட்டியானிடம் அவரது மகன், “அப்பா இந்த பிணம் எரியும் இடமே நன்றாகத்தானே உள்ளது. ஏன் தாத்தாவை கீழே வச்சு எரிச்சோம் என கேட்க, அதற்கு அப்பா இங்கே நாம் எரிக்க தான் முடியும், எரிய முடியாது” என்கிற வசனமாகட்டும், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரையே பல பேர் ஒரு ஜாதி கட்சியின் தலைவராகத்தான் பார்க்கிறார்கள்” என்கிற வசனமாகட்டும் அருமையாக எழுதியுள்ளார். 

படத்தின் குறையாக தெரிவது முதல் பாதி சென்ற விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைவு, இதனால் படம் சில இடங்களில் லேக் அடிப்பது போன்ற உணர்வு வரத்தான் செய்கிறது. இன்னொரு புறம், மேற்கண்டது போல வசனங்கள் நம்மை ஈர்த்தாலும், சொல்ல வேண்டியதை ஓவர் டோசாக சொல்லி விட்டாரா? அதாவது ஒவ்வொரு அசைவிலுமே இந்த தீண்டாமை தவறு என்பது போல கருத்தூசியை ஓவராக செலுத்தியுள்ளது போல் ஒரு உணர்வு. இன்றைய காலக்கட்டத்திற்கு கட்டாயம் சொல்ல வேண்டிய விஷயம்தான் ஆனால் அதை படமுழுக்க சொல்லும்போது சற்று உறுத்தலாக இருக்குகிறது. மேலும், இப்படம் சொல்லும் கருத்து அனைவரும் ஏற்று கொள்வார்களா என்பது கேள்விக் குறிதான்! இறுதியாக படம் எப்படி என்றால்? சொல்ல வேண்டிய கதை, பார்க்க வேண்டிய சினிமா எனவே நிச்சயமாக ஒருமுறை குடும்பத்துடன் சென்று பாக்கலாம்! 

Nenjuku Needhi Movie FC Rating: 3.5 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்