நயன்தாரா நடிக்கவுள்ள மலையாள திரில்லர் திரைப்படம் ‘நிழல்’!

0
Nayanthara's New Malayalam Movie

‘லேடி சுப்பர் ஸ்டார்’ நயன்தாரா தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாள படங்களிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்தில் நடித்திருந்த நயன்தாரா, தற்போது அப்பு N.பட்டாதிரி இயக்கத்தில் ‘நிழல்’ என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதைப் பெற்ற அப்பு என்.பட்டாதிரி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Nayanthara's New Malayalam Movie
Nayanthara

இப்படத்தில் நாயகனாக குஞ்சாகா போபன் நடிக்கவுள்ளார், ஆண்டோ ஜோசப், அபிஜித் எம்.பிள்ளை, ஃபெலினி, படுஷா மற்றும் ஜினிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சூரஜ் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nayanthara's New Malayalam Movie
Nayanthara’s New Malayalam Movie

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...