சல்மான் கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா? உண்மை நிலவரம்

0
Nayanthara to be paired with Salman Khan!
Nayanthara to be paired with Salman Khan!

சல்மான் கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா? உண்மை நிலவரம்: தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை நயன்தாரா தற்போது சுமார் அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார்.

தமிழில் இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது, இதைத் தொடர்ந்து O2, கனெக்ட் ஆகிய படங்களில் முதன்மை பாத்திரத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘காட் ஃபாதர்’ படத்திலும், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ‘கோல்ட்’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இதை தவிர ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

Nayanthara to be paired with Salman Khan!
Nayanthara to be paired with Salman Khan!

இந்நிலையில் மேலும் ஓரு ஹிந்தி படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சல்மான் கான் ஜோடியாக புதிய படமொன்றில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள போவதாகவும் கூறப்படுகிறது. ஆக, திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா தொடர்ந்து நடிக்க போகிறார் என்பது இதிலிருந்து கிடைத்துள்ள தகவல். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்