மலையாளத்தில் பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘பிரதி பூவன் கோழி’. ஆணாதிக்க உணர்வை எதிர்த்துப் போராடத் துணியும் ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளின் ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார். மேலும்தமிழில், இப்படத்தின் முதன்மை பாத்திரமான மஞ்சு வாரியார் பாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முக்கிய காட்சியான பேருந்து காட்சி ரசிகர்கள் பரப்பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...