மீண்டும் பிரபு தேவா படத்தில் நடிக்கும் நயன்தாரா?

0
Nayanthara joins with Prabhu Deva again?

பிரபு தேவா – நயன்தாரா காதல் கதை அனைவரும் அறிந்ததே, திருமணம் வரை பேச்சு எழுந்து திடீரென இருவரும் பிரிந்தனர்.

Nayanthara joins with Prabhu Deva again?

இந்நிலையில் மீண்டும் இருவரும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் பிரபு தேவா இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் விஷால் மற்றும் கார்த்தி நடிப்பில் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்கிற படம் உருவாவதாக இருந்தது. எல்லா வேலைகளும் முடிந்து படப்பிடிப்பிற்கு நகரும் போது இப்படம் கைவிடப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் ஐசரி கணேஷ். விஷாலை தவிர்த்து வேறொரு ஹீரோவுடன், கார்த்தி நடிக்க, அதே கூட்டணியில் இப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Nayanthara joins with Prabhu Deva again?
Prabhu Deva & Nayanthara

இதில் ஹைலைட் என்னவென்றால் நயன்தாரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. எப்படி பிரபு தேவா இயக்கும் படத்தில் நயன்தாரா நடிப்பார் என ரசிகர்கள் நினைக்க, கோலிவுட் வட்டாரத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த செய்தி.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...