தனது சம்பளத்தை குறைத்து கொண்ட நடிகை நயன்தாரா!

0
Nayanthara has reduced her Salary

கொரோனா பாதிப்பினால் சினிமா துறையைப் பொறுத்தவரை மொத்தமாக பாதிக்கப்பட்டிருப்பது தயாரிப்பாளர்கள் மட்டுமே. எனவே தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி உள்ளிட்ட சிலர் தங்களது சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவும் இணைந்துள்ளார்.

Nayanthara has reduced her Salary

மலையாளத்தில் அடுத்து நடிக்கவுள்ள ‘நிழல்’ என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். திரில்லர் உருவாகவுள்ள இப்படத்தில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். இந்த படத்துக்கு சம்பளத்தை நயன்தாரா குறைத்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி நயன்தாரா தமிழில் மட்டும் ரூ.4 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…