நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு கொரோனா பாதிப்பா? உண்மை நிலவரம்

0
Nayanthara and Vignesh Shivan affected by Corona?

2020 -ஆம் ஆண்டு கொரோனா என்கிற நுண்ணுயிரால் வரலாற்றில் மறக்கமுடியாத ஆண்டாக மாறியுள்ளது, உலகமுழுவதும் பாதிப்பு, லட்சக்கணக்கில் மரணங்கள் என இதுநாள் வரையிலும் தீர்வு இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது, தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ஹாட்ஸ்பாட்டாக கொரோனா பாதிப்பிலும் மாறியுள்ளது. அதனால் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Nayanthara and Vignesh Shivan affected by Corona?
Nayanthara

இந்நிலையில் முக்கியமாக தமிழ் சினிமாவுக்கு அடையாளமாக இருக்கும் கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி பகுதிகளில் அதிகமான கொரோனாவின் பதிப்பு எண்ணிக்கை இருக்கிறது. இங்கு வசிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் மிஷ்கின் உள்ளிட்டோர் தாங்களாகவே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமையில் இருப்பதாகவும் செய்திகள் தீயாக பரவின.

Nayanthara and Vignesh Shivan affected by Corona?
Nayanthara – Vignesh Shivan

அவர்களும் மனிதர்கள்தான கொரோனா பரவாதா? என நினைப்பது ஒருபுறம் இருந்தாலும், உண்மையான நிலவரம் என்ன என நயன்தாரா ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், இந்த செய்திகள் உண்மையில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாங்கள் இருவரும் நலமாக இருப்பதாக கூறியுள்ள அவர், தான் படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும், நயன்தாரா, உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட பணிகளை செய்து வருவதாகவும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...