ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்களின் மரணம் இந்திய சினிமாவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘நெப்போடிஸம்’ என்கிற வார்த்தை பூதாகரமாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது, சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் நெப்போடிஸம் தான் எனவும், பாலிவுட்டில் காலம் காலமாக இது தலைத்தூக்கி நிற்கிறது எனவும் அங்குள்ள ரசிகர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளராக துவங்கி பின்பு நடிகராக மாறிய நட்டி (எ) நட்ராஜ் இதுக்குறித்து தனது கருத்தை வேண்டுகோளாக பதிவு செய்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ” மனச்சோர்வு(depression)… இதற்க்கு காரணம் எதிரி அல்ல.. நண்பனே… எதிர்பார்ப்புகள் தோற்கும்போது.. நடப்பவை துரதிர்ஷ்டமே…. பலரும் கடந்து போகும் பாதை இது.. இதுவும் கடந்து போகும்…”
“I pity n feel sorry about the loss of hindi cinema… Sushanth singh Rajput… RIP..” என சுஷாந்த் இறந்ததற்கான இரங்கலுடன், “புகழ் பெற்றவர்கள் வளர்பவர்களை ஆதரியுங்கள்.. அவர்கள் போட்டியாளர்கள் அல்ல… உங்களை அண்ணார்ந்து பார்த்து ஆச்சர்யப்படுபவர்கள்.. நீங்களே அனைத்திற்கும் உதாரணம்….” என தனது வேண்டுகோளை வளர்ந்த நடிகர்களுக்கு வைத்துள்ளார்.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...