சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நந்திதா ஸ்வேதா:
தமிழ், தெலுங்கு மொழிகளில் அவ்வபோது நடித்து வரும் நடிகை நந்திதா ஸ்வேதா, வினோதமான தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுக்குறித்து பேசிய நந்திதா, “பைப்ரோமியால்ஜியா என்ற தசை கோளாறால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த நோய் என் உடல் எடையை கடுமையாக குறைத்துள்ளது. ஒரு சிறிய வேலையை செய்ததால் கூட அது தசைகளில் பிரச்சனையை உண்டாக்குகிறது.


அதனால் என்னால் உடற்பயிற்சி கூட செய்ய முடியவில்லை. சில நேரங்களில் எழுந்து நடப்பதற்கு கூட கடினமாக இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசை மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி இருக்கும். மோசமான நினைவாற்றல் போன்ற விஷயங்களால் பாதிக்கப்படுவீர்கள். இவ்வளவு பிரச்சனையுடனேயே அடுத்த படத்திற்காக பணியாற்றியுள்ளேன்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே நடிகை சமந்தா இதுபோல பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண