தமிழகத்தில் மர்ம காய்ச்சல்! பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் பதில்

0
Mysterious fever in Tamil Nadu! Holidays for schools? Minister replied
Mysterious fever in Tamil Nadu! Holidays for schools? Minister replied

தமிழகத்தில் மர்ம காய்ச்சல்! பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் பதில்: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 1044 பேர் இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mysterious fever in Tamil Nadu! Holidays for schools? Minister replied
Mysterious fever in Tamil Nadu! Holidays for schools? Minister replied

இந்நிலையில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என கேள்விகள் எழுந்து வந்த நிலையில், இதுக்குறித்த விளக்கத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, “அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை.தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTER