அமித்ஷாவின் வாகனத்தை மரித்த மர்ம கார்! கண்ணாடி உடைப்பு

0
Mysterious car that killed Amit Shah's vehicle! Glass breakage
Mysterious car that killed Amit Shah's vehicle! Glass breakage

அமித்ஷாவின் வாகனத்தை மரித்த மர்ம கார்! கண்ணாடி உடைப்பு: மத்திய அரசு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன் தினம் தெலங்கானா மாநிலத்திற்கு சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று அமித் ஷா ஐதராபாத் அருகே பேகம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு செல்வதாக திட்டமிடப்பட்டு செல்லும் வழியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Mysterious car that killed Amit Shah's vehicle! Glass breakage
Mysterious car that killed Amit Shah’s vehicle! Glass breakage

இந்நிலையில், அமித்ஷாவின் வாகன அணிவகுப்பு அந்த ஓட்டலுக்கு உள்ளே நுழைய முயன்றபோது, வழியில் இடையூறாக மர்ம கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் அமித்ஷாவின் வாகன அணிவகுப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், அந்த மர்ம காரை பாதுகாவலர்கள் அகற்றினர். விசாரித்ததில் அந்த கார் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.  இதனால் அந்த கார் அகற்றப்பட்டதுடன் மட்டுமில்லாமல், கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTER