தமிழ் சினிமாவின் தற்போது பிசியாக பறந்துக் கொண்டிருக்கும் ஒருசில நடிகர்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முன்னிலையில் உள்ளார். அந்த அளவிற்கு கையில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கவுள்ளதாக நீண்ட மாதங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த மாதம் இப்படத்தின் பணிகள் துவங்கியுள்ளது. இதுக்குறித்து பல்வேறு கண்டனங்கள் விஜய் சேதுபதி நோக்கி வைக்கப்பட்டது, எனினும் தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 800 என பெயரிட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரில், முத்தையா முரளிதரன் தோற்றத்தில் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இறுதியில் வருகிறது. இது ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…